Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு விவசாயச் சங்கத்தினர் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுபட்ட தாலுகாக்களில் உள்ள விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் பயிர் காப்பீட்டைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது எனக் கோரியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கல்யாணசுந்தரம், முருகேசன், ராஜ்குமார் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 66 பேரை போலீஸார் கைது செய்தனர். 

பயிர் காப்பீடு தொகை கோரி விவசாயிகள் மறியல்


திருவாடனை வட்டாட்சியர் அலுலகம் முன்பு மாநிலத் துணைத் தலைவர் முகம்மது அலி, மாவட்டச் செயலாளர் முத்துராமு, சேதுராமு ஆகியோர் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் அவர்களைக் கலைந்துபக்ச் செய்தனர்.

 பரமக்குடியில் மகாலிங்கம், பொன்னுச்சாமி, ராஜா ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 106 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர். இதேபோல் கடலாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மயில்வாகனன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 90-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement