வெளியிடப்பட்ட நேரம்: 16:49 (27/09/2017)

கடைசி தொடர்பு:16:49 (27/09/2017)

தீர்ப்பு வழங்கிய குன்ஹா... வீழ்ந்த ஜெயலலிதா... சிறையில் சசிகலா! #3YearsOfJayaVerdict

ஜெயலலிதா

செப்டம்பர் 27, 2014 ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூவரும் சென்னை விமான நிலையத்தில் 8.57-க்கு தனி விமானத்தில் கிளம்பி, பெங்களூரு ஹெச்.ஏ.எல் விமான நிலையத்தில் 9.40-க்கு தரையிறங்கினர். பிறகு அங்கிருந்து கான்வாய் மூலம் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து பரப்பன அக்ரஹாரா ஜங்ஷன் வரை அவரை வரவேற்று 500 ஃபிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

8 மணிக்கு தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குணசீலன், சம்பந்தம், 8.10-க்கு அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் பவானி சிங், மராடி வந்தனர். 9.50-க்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா வந்தார். அவருடைய காருக்கு முன்னும் பின்னும் மூன்று காவல் துறை வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு இருந்தது. 10.10-க்கு ஜெயலலிதா வழக்கறிஞர்கள் நவநீதகிருஷ்ணன், செந்தில், குமார், மணிசங்கர், அசோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் சென்றனர். 10.45-க்கு 23 வாகனங்கள் புடைசூழ தேசியக் கொடி கட்டிய வாகனத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மூன்று பேரும் வந்து இறங்கினர். அதிலிருந்து நடந்த நிகழ்வுகள் இதோ...

2014

செப்டம்பர் 27

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இதில் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும் மற்றவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.

அக்டோபர் 17

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெயில்

டிசம்பர் 18

ஜெயலலிதாவின் பெயிலை நான்கு மாதங்கள் நீடித்தது உச்ச நீதிமன்றம். கர்நாடக உயர் நீதிமன்றத்திலிருந்து சிறப்பு அமர்வு விசாரிக்கவும் உத்தரவிட்டது.

2015

ஜனவரி 1

சிறப்பு அமர்வின் நீதிபதியாகக் குமாரசாமியை நியமித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.

பிப்ரவரி 26

தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன், அரசு வழக்கறிஞர் பவானி சிங் நீக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்.

ஏப்ரல் 7

சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பை ஏப்ரல் 15-ம் தேதிவரை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.

ஏப்ரல் 15

தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் மனுவை விசாரிக்கப் பரிந்துரை செய்தது உச்ச நீதிமன்றம்.

மே 11

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்தது கர்நாடக சிறப்பு அமர்வு. மீண்டும் ஜெயலலிதா முதல்வராகிறார்.

ஜூன் 23

குமாரசாமி தீர்ப்பில் நிறைய தவறுகள் இருப்பதாக, உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்படுகிறது.

நவம்பர் 18

தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன்  உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகாவில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு.

2016

ஜனவரி 7

ஜெயலலிதா வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி

பிப்ரவரி 23

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது.

ஜூன் 24

வழக்கின் தீர்ப்பில் உள்ள குளறுபடிகளை அடையாளம் கண்டது கர்நாடக நீதிமன்ற அமர்வு.

டிசம்பர் 5

முதல் குற்றவாளியாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஜெயலலிதா காலமானார்.

2017

பிப்ரவரி 14

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மீதமுள்ள இரண்டு பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜூலை 18

சசிகலா சிறையில் சொகுசாக ஷாப்பிங் சென்றுவருவது போன்ற வீடியோ வெளியானது.


டிரெண்டிங் @ விகடன்