இலங்கைத் தமிழ் மாணவி படுகொலை வழக்கு : 7 பேருக்கு மரண தண்டனை

இலங்கை புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இலங்கை புங்குடுத்தீவு பகுதியைச் சேர்ந்த தமிழ் மாணவி வித்தியா கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி பாலியல் வன்முறைக்கு  உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 9 பேர் மீது இலங்கைப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர்களில் இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்படவில்லை. இதையடுத்து,  யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனின் தலைமையிலான அமர்வு இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயகுமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரதாசன், சிவநேசன் துஷாந்தன், ஜெயநாதன் கோகிலன், சுவிஸ்குமார் ஆகிய 7 பேருக்கும் மரணத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். 

மேலும் குற்றவாளிகளுக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!