Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மருத்துவ ’சீட்’ முறைகேடு விவகாரம்: புதுச்சேரி அரசு அதிகாரிகளைக் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை

புதுச்சேரி மருத்துவ சீட் சேர்க்கையில் முறைகேடில் ஈடுபட்டதாக சி.பி.ஐ-யால் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 5 அரசு அதிகாரிகளைக் கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி

’சென்டாக்’ கலந்தாய்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக ஆளுநர் கிரண்பேடி மற்றும் மாணவர்-பெற்றோர் அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தனர். இந்நிலையில்தான் சமீபத்தில் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடில் ஈடுபட்டதாக புதுச்சேரி சுகாதாரத் துறையின் இயக்குநர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 13 பேர்மீது வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. அதைத்தொடர்ந்து சி.பி.ஐ நடவடிக்கைக்கு உள்ளான அரசு அதிகாரிகளில் 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுமுறைக்கால நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்  இன்று விசாரணைக்கு வந்தது. 

சி.பி.ஐ

அப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.ஆர்.பாபு, சுகாதாரத்துறை இயக்குநர் ராமன், ’சென்டாக்’ கன்வீனர் கோவிந்தராஜ், துணை கன்வீனர் பழனிராஜா, இணை கன்வீனர் ஜொனாதன் டேனியல் ஆகியோர் ஒன்றாக மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில் சி.பி.ஐ தங்களை கைதுசெய்யத் தடைவிதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்திருந்தனர். அதற்குப் பதில் மனுத்தாக்கல் செய்வதற்காக சி.பி.ஐ கால அவகாசம்  கேட்டதால், இந்த வழக்கு வழக்கமான நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்வரை மனுதாரர்களைக் கைதுசெய்ய இடைக்காலத் தடையை விதித்து வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம். மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரியான வளர்ச்சி ஆணையர் நரேந்திர குமார் முன்ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement