’ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை’ - அப்போலோ

"எங்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாகவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

apollo
 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இன்னும் விசாரணை தொடங்கவில்லை. இதனிடையே, ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்க தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனைகளின் நிர்வாகத் தலைவர் ஹரிபிரசாத், "ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அ.தி.மு.க அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்தது உண்மை. ஆனால், உள்ளே அனுமதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்று விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்க இருக்கிறோம். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில், சி.சி.டிவி கேமராக்கள் இல்லை என்பதால், சிகிச்சைக்கான வீடியோ காட்சிகள் கிடையாது. ஆனால், மருத்துவமனை வளாகத்தில் பதிவான சி.சி.டிவி காட்சிகள் அனைத்தும் உள்ளன. 

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவருக்குக் கொடுக்கப்பட்ட உணவு குறித்த முழு விவரம் இருக்கிறது. அ.தி.மு.க அமைச்சர்களின் பலதரப்பட்ட கருத்துகளுக்குப் பதில் சொல்ல முடியாது. ஜெயலலிதா கைரேகை வைத்தது குறித்த விவரங்கள் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கப்படும். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த அனைத்து பதிவுகளும் உள்ளது. அப்போலோ தரப்பில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. மரணம்குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!