Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்களுக்கு திருச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

 

துப்பாக்கிதிருச்சி, மணப்பாறை  அடுத்த வீரமலைப்பாளையம் துப்பாக்கிச் சுடும் இடத்தில் வெடிக்காத குண்டுகளை அழிப்பது, செயலிழக்கச் செய்தல் பணி நடைபெறவுள்ளதால் அப்பகுதிகளில், கால்நடை, மனிதர்கள் எவரும் பிரவேசிக்கக் கூடாது மாவட்ட கலெக்டர் தகவல் வெளியிட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அனியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள மலைப்பகுதிகளில், உள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சி இடத்தில், வெடிக்காத வெடிகுண்டுகள் கிடப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த ஜூலை மாதம், மணப்பாறை பகுதியில் உள்ள ஒரு பழைய இரும்புக்கடையில் ராக்கெட் லாஞ்சர் வெடித்தது குறித்தும் அதை ராணுவ வீரர்களே எடைக்குப் போட்டது குறித்தும், இதில் மாரியப்பன் என்பவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. மேலும், மணப்பாறை வீரமலைப் பகுதியில் ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் பகுதியில் ஏராளமான வெடிகுண்டுகளும் துப்பாக்கிக் குண்டுகளும் சிதறிக்கிடக்கின்றன எனக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அப்பகுதியில் ஆய்வு செய்த போலீஸார் வெடிகுண்டுகள், மற்றும் துப்பாக்கித் தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர்களைக் கண்டறிந்தனர். மேலும் நிறைய வெடிகுண்டுகள் அப்பகுதியில் கிடப்பதாக மக்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் வரும் 29-ம் அன்று ராணுவ சிறப்புக் குழுவினர், காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை வெடிக்காத குண்டுகளை அழிப்பது, செயலிழக்கச் செய்தல் பணியை மேற்கொள்ள உள்ளனர் என்றும், அதனால் வீரமலைப்பாளையத்தில் உள்ள மலைப்பகுதிகளில், மேய்ச்சலுக்காகக் கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது, மேலும் எவரும் துப்பாக்க்ச் சுடும் இடத்துக்குள் பிரவேசிக்கக் கூடாது என திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement