Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேராசிரியர் கத்திக்குத்தைத் தொடர்ந்து துணைவேந்தர் அதிரடி!

 

செல்லதுரை

 

மதுரை காமராஜர் பல்கலைகழகம் பல ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கிவருகிறது . முன்னாள் துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் மற்றும் தற்போதைய துணைவேந்தர் செல்லதுரை ஆகியோர் மீதும் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது . அதன் இறுதி விசாரணை அறிக்கையைக் கூட விரைவில் தாக்கல்செய்ய காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறான பல புகார்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் பல்கலைக்கழக ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு மிகவும் குறைவான மதிப்பில்தான் பல்கலைகழகம் செயல்பட்டுவருகிறது .

இந்நிலையில், நேற்று இதழியல்துறையின் துறைத் தலைவர் பேராசிரியர் ஜெனிபாவை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . அதைத்தொடர்ந்து துணைவேந்தர் செல்லதுரை பல்கலைக்கழக பாதுகாப்பில் புதிய முடிவுகளை எடுத்துள்ளதாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார் அதில் "பேராசிரியர் ஜெனிபாவுக்கு ஜோதிமுருகன் 6 மாதங்களுக்கு மேல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஆனால், இதுகுறித்து எந்தப் புகாரும் ஜெனிபா தெரிவிக்கவில்லை  முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நடவடிக்கைகள் எடுத்திருக்கலாம். எனினும், தற்போது ஜோதி முருகன் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம். அதற்காக 6 பேர் கொண்ட குழு அமைத்து உண்மையைக் கண்டறிந்து அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுப்பேன். கல்லூரி முழுவதும் முக்கியமான இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.

கல்லூரி நுழைவு வாயில் மற்றும் வளாகம் உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் . அனைவரிடமும் அடையாள அட்டை முறையாக பரிசோதிக்கபட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர். மேலும், இதுபோல பல பாதுகாப்பு முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் துணைவேந்தர் செல்லதுரை தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement