Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடரும் டெங்கு சோகம்..! சேலத்தில் பள்ளி மாணவன் பலி

சேலம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லவன். இவர் சேலம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் ஜெனீபா. இவர்களின் ஒரே மகன் ஜெய்கிருஷ்ணா வயது 12. இவர் சேலம் சிவதாபுரத்தில் உள்ள தனியார்ப் பள்ளியில் 7-ம் வகுப்புப் படித்து வந்தார். மூன்று நாள்களுக்கு முன்பு, காய்ச்சல் காரணமாக சேலம் ஐந்து ரோட்டில் உள்ள கோகுலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
காய்ச்சல் குறையாமல் அதிகரித்ததை அடுத்து கோவை கே.எம்.ஜி.ஹெச் மருத்துவமனையில் உயர் சிசிக்கைக்காக சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று ஜெய்கிருஷ்ணா இறந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த அவரது உறவினர், 'ஜெய்கிருஷ்ணன் அவர்களின் பெற்றோருக்கு ஒரே பையன். ரொம்ப செல்லமாக வளர்த்தார்கள். ரொம்ப சுட்டியான பையன். நன்றாகப் படிக்கக்கூடியவன். 3 நாள்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்ததால் சேலம் ஐந்து ரோட்டில் உள்ள கோகுலம் மருத்துவமனையில் சேர்த்து வந்தோம். காய்ச்சல் கொஞ்சம் கூட குறையவில்லை. இரத்தம் பரிசோதனை செய்து பார்த்ததில் டெங்குக் காய்ச்சல் எனத் தெரியவந்தது. அதையடுத்து கோவையில் உள்ள கே.எம்.ஜி.ஹெச் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். இரண்டு நாள்கள் அந்த மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை இறந்துவிட்டார்' என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement