Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறார்கள்..! பிரின்ஸ் கஜேந்திரபாபு தாக்கு

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சேலத்தில் சமுக நீதிக்கான மாணவர், இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்புரை ஆற்றினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்துகொண்டார்கள்.

இதில் நீட் தேர்வு காரணமாக மரணமடைந்த மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும். தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியைப் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டும், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமாக வழங்க வேண்டும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான இட ஒதுக்கீட்டை பறிக்கக் கூடாது' என்பது போன்ற கோரிக்கைகளை எழுப்பினர். 

இதையடுத்து பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, ''நீட் என்பது சமூக அநீதியின் அடையாளம். நீட் எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமானது அல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களுக்குமானது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பை வழங்குவதே சமூக நீதி, சமத்துவம் ஆகும். இதையெல்லாம் மனதில் வைத்துதான் 2016-ம் ஆண்டு ஜெயலலிதா தன் தேர்தல் பிரசாரத்தில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வேன். அதற்கான வலுவான சட்டம் இயற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
அம்மாவின் ஆட்சி நடைபெறுவதாகச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் வாக்குறுதிகளுக்கு எதிர்மாறாக நடந்துகொண்டு ஜெயலலிதாவை அவமானப்படுத்துகிறார்கள். இவர்களின் செயல்பாட்டை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று நீட்டுக்குத் தமிழகத்திலிருந்து டாட்டா காட்ட வேண்டும்'' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement