Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஈரானில் உயிரிழந்தவர் தொடர்பான வழக்கு..! வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் தர உத்தரவு

நெல்லை நாங்குநேரிப் பகுதியைச் சேர்ந்தவர் சங்கரபாண்டி. இவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் "என் மகன் பொன்ராஜ். மெரைன் எஞ்சினீயரிங் முடித்துவிட்டு ஈரான் நாட்டில் பஷல் துறைமுகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். உரிய விசா பெற்று கடந்த 9 ஆண்டுகளாகப் பணி செய்துவந்தார். தொடர்ந்து எங்களிடம் மொபைல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி எங்களைக் காரைக்காலில் உள்ள ஏஜென்ட் தொடர்பு கொண்டார். அப்போது, என் மகன் பொன்ராஜ், அதிக அளவு மது அருந்தியதால் இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து மேலும் 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

ஆனால், அடுத்த நாள் எனது மகன் இறந்து விட்டதாகத் தகவல் வந்தது. என் மகன் குடிப் பழக்கம் இல்லாதவன். மேலும் அங்கிருந்த சமையல் மாஸ்டர் ஒழுங்கீனத்தால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.  என் மகன் மரணத்தில் மர்மம் உள்ளது. ஈரானில் உள்ள நிறுவனமும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தருகிறது. இதுவரை என் மகன் உடல் 33 நாள்களுக்கு மேலாகியும் இந்தியா கொண்டுவரப்படவில்லை. எனவே எனது மகன் எவ்வாறு இறந்தான் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். எனது மகன் பொன்ராஜ் உடலை இந்தியா கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், சுந்தர் அமர்வு, இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், மாவட்டக்  காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை ஒரு வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement