Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரை ஆதீனம் மடத்துக்குள் பூஜைகள் செய்ய பாதுகாப்பு கேட்டு நித்யானந்தா நீதிமன்றத்தில் மனு !

293-வது ஆதீனம் என்ற முறையில் மதுரை ஆதீனம் மடத்துக்குள் சென்று பூஜைகள் செய்வதற்கு உரிய காவல்துறைப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பிரடி நிந்தியானந்தாவின் ஆசிரம நிறுவனர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நித்தியானந்தா தாக்கல் செய்த அந்த மனுவில், "2500 ஆண்டு பழைமையான மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனமாக 292-வது ஆதீனம் அருணகிரிநாதரால் 2012-ல் நியமிக்கப்பட்டேன். தொடர்ந்து மடத்தில் ஆன்மிகப் பணிகளைச் செய்து வந்தேன். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்களுக்கு எனது சொந்தச் செலவில் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கினேன். இந்நிலையில் மடத்தின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்தில் செயல்படும் சிலர் மடத்துக்கு எதிராக பிரச்னைகளை ஏற்படுத்தினர்.

பின்னர் மடத்தின் நிர்வாகத்தை அறநிலையத்திடம் ஒப்படைக்கக்கோரி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் என்னை 293-வது ஆதீனமாக நியமனம் செய்ததை ரத்து செய்து விட்டதாக அருணகிரிநாதர் அறிவித்தார். என்னை நீக்குவதற்கு அருணகிரிநாதருக்கு எந்த அதிகாரமும் இல்லை. திருநாவுக்கரசு என்பவரை அடுத்த ஆதீனமாக நியமனம் செய்தது செல்லாது. மதுரை ஆதீனம் மடத்துக்குள் சென்று என் கடமைகளைச் செய்வதற்கு சிலர் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த சட்டவிரோத கும்பல் என்னை மிரட்டி வருகின்றனர். இதனால் 293-வது ஆதீனம் என்ற முறையில் மதுரை ஆதீனம் மடத்துக்குள் சென்று பூஜைகள் செய்வதற்கு உரிய காவல்துறைப் பாதுகாப்பு வழங்க விளக்குத்தூன் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும்"என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வர உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement