Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கால்வாய் வசதி இல்லாத ஊட்டி..! சிறிய மழைக்கு வெள்ளக்காடானது

Ooty

கோப்புப்படம்

செப்டம்பர் மாதம் என்றாலே ஊட்டியில் மழை ஊத்திக்கொண்டேதான் இருக்கும். ஆனால், இன்று கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கும் மேலாக விடாமல் அடை மழை அடித்தது. லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் ஊட்டி நகரத்தில் மழை நீர் வடிகால்கள் சரியாக அமைக்கப்படவில்லை என்பதை இந்த மழை காட்டியிருக்கிறது. மழை நீர் உடனடியாக வெளியேறாததால் நகரத்தின் பல பகுதிகளைத் தண்ணீர் மூழ்கடித்தது. மார்கெட், பேருந்து நிலையம், சேரிங்கிராஸ் காம்பிளக்ஸ் போன்ற பல இடங்களில் கார், பைக்குகள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் நின்றது.

ஊட்டி வாசிகளிடம் பேசியபோது, "சுற்றுலா மூலம் ஊட்டிக்கு எக்கச்சக்கமான வருமானம் வருகிறது. ஆனால், ஒரு சீர்மிகு நகரக் கட்டுமானம் இங்கு இல்லை. அரை மணி நேரம் விடாமல் பெய்த மழைக்கே ஊட்டி ஏதோ வெள்ளக்காடு போல ஆகிவிட்டது. ஃபேஸ்புக்கில் பார்த்தவர்கள் எல்லாம் ஊட்டியில கன மழையால் வெள்ளமாமே!? என்று கேட்கிறார்கள். மழை நீர் வடிகால்கள் கூட முறையாகப் பராமரிக்கப்படாததால்தான் தண்ணீர் நின்றதே ஒழிய பெரிய வெள்ளமெல்லாம் இல்லை. சில கடைகளுக்குள், தாழ்வான பகுதிகளுக்குள்  தண்ணீர் புகுந்துவிட்டது. சில இடங்களில் கார்கள் பாதி மூழ்கிப்போனது. இன்னும் ஒரு மணி நேரம் மழை நீடித்திருந்தால் சேதங்கள் ஏற்பட்டிருக்கும். இதை ஊட்டி நகராட்சி கவனத்தில் கொள்ள வேண்டும்' என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement