வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (28/09/2017)

கடைசி தொடர்பு:08:14 (28/09/2017)

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'இப்படை வெல்லும்' படத்தின் டீசர் வெளியானது!

'தூங்காநகரம்', 'சிகரம் தொடு' போன்ற படங்களைக் கொடுத்த கெளரவ் நாராயணன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 'இப்படை வெல்லும்' படத்தின் டீசர் வெளியானது. 

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக 'அச்சம் என்பது மடமையடா', 'சத்ரியன்' படங்களில் நடித்த மஞ்சிமா மோகன் நடிக்கிறார். ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக வெளிவரக் காத்திருக்கும் இப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும், ராதிகா, சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே சுரேஷ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் என்.நாதனும் படத்தொகுப்பாளராக கே.எல்.பிரவீனும் பணியாற்றி உள்ளனர். இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. பரபரப்பான காட்சிகள் உடைய டீசர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க