Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கன்னியாகுமரியில் விவசாயிகள் போராட்டம்..! 150 பேர் கைது

தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் ரத்துசெய்யப்பட வேண்டும். விவசாயக் கடன்கள் தள்ளுபடிசெய்யப்பட வேண்டும். வேளாண் விளை பொருள்களுக்குக் கூடுதலாக 50 சதவிகிதம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ரப்பர் விலை வீழ்ச்சி அடைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரப் பதிவில் இருக்கும் சிக்கல்களைச் சீர் செய்ய வேண்டும் எனப் பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில், விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு, விவசாயிகள் சங்கத் தலைவர் செல்லசாமி தலைமைதாங்கினார்.

மறியல் போராட்டத்தை முன்னாள் எம்.பி., பெல்லார்மின் தொடங்கிவைத்தார். போராட்டக்காரர்கள், தக்கலை பேருந்து நிலையம் முன் நின்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்கள். அதைத் தொடர்ந்து, ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபடுவதற்காக ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, டி.எஸ்.பி.,மகேந்திரன் தலைமையில் போலீஸார் விவசாயிகளைத் தடுத்து நிறுத்தினர். அதனால், விவசாயிகள் தக்கலை பேருந்து நிலையம் அருகில் மறியல்செய்தனர். அதைத் தொடர்ந்து, பெண்கள் உட்பட 150 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனால், தக்கலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement