Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'குயின்' திரைப்பட ரீமேக்கில் இவர்கள் நடிக்கிறார்களாம்

கங்கனா ரணாவத் நடிப்பில், பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், ‘குயின்’. சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்ற இப்படத்தை, விகாஸ் பாஹல் இயக்கியுள்ளார்.

குயின்

இந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பல மாதங்களாகவே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. ஆனால். இயக்குநர்கள், நடிகர்கள் யார் என்ற தகவல் உறுதிப்படுத்தாத நிலையில் இருந்தது. தற்போது, அதற்கான பதில் ஓரளவு கிடைத்துவிட்டது. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல் யாதவ் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். தமிழில் 'பாரிஸ் பாரிஸ்' என்ற பெயரிலும், கன்னடத்தில் 'பட்டர்ஃப்ளை' என்ற பெயரிலும் ரமேஷ் அரவிந்த் இயக்கவிருக்கிறார். தெலுங்கில் நீலகண்ட ரெட்டி இயக்குகிறார். மலையாளத்தில் அமலா பால் நடிப்பதாகத் தகவல்கள் வெளியானது. ஆனால், தற்போது அந்த கதாபாத்திரத்தில் மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்துக்கு, 'ஸம் ஸம்' எனப் பெயரிட்டுள்ளனர். இதைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மஞ்சிமா மோகன். மலையாள ரீமேக் படத்துக்கான இயக்குநரும் மற்ற நடிகர்களும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement