Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாடத்திட்டத்தை மாற்றும் குழுவில் இஸ்ரோ விஞ்ஞானி! செங்கோட்டையன் தகவல்

''பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதற்கான குழுவில், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி மற்றும் சிறந்த கல்வியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்'' என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு (2017- 2018 கல்வியாண்டு) முதல் ப்ளஸ் ஒன் வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் பாடங்களுக்கான மதிப்பெண்ணை 200-ல் இருந்து 100 ஆக குறைக்கப்படுகிறது என்றும், இதனால் ஒட்டுமொத்த மதிப்பெண் 1200-ல் இருந்து 600 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.

மேலும், 2018-ம் ஆண்டில் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்குப் பாடத்திட்டம் மாற்றப்படும் என்றும் 2019-ம் ஆண்டில் 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் அறிமுகம்செய்யப்படும் என்றும் 2020-ம் ஆண்டில் 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் புதிய பாடத் திட்டம் அறிமுகம்செய்யப்படும் என்றும் அமைச்சர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், நவம்பர் 15-ம் தேதிக்குள் பாடத்திட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதற்கான குழுவில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி மற்றும் சிறந்த கல்வியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறினார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களின் குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வரும் நிலை உருவாக்கப்படும் என்று தெரிவித்த செங்கோட்டையன், கிராமப்புறங்களில் பின்தங்கியுள்ள மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு 31 சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement