Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேரளாவில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முதல் பூசாரிமீது மீண்டும் தாக்குதல்!

கேரள மாநிலம், ஆலப்புழை அருகேயுள்ள செட்டிக்குளக்காரா தேவி கோயிலுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த பூசாரி சுதிர் குமார், அங்கு பணிசெய்ய எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து, அவரின் பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவின் முதல் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த பூசாரிமீது இரண்டாவது தடவையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

தாக்குதலுக்குள்ளான பூசாரி

மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பிஜு நாராயணன். திருவிதாங்கூர் தேவசம் போர்டில் பணிக்கு எடுக்கப்பட்ட பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த முதல்  பூசாரி ஆவார். பாலக்காடு மாவட்டத்தில், செர்புழச்சேரியில் உள்ள கோயிலில் பணிபுரிந்ததால், அங்கேயே வசித்துவந்தார். நேற்றிரவு ஒரு மணியளவில், இவரின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்த கும்பல், உறங்கிக்கொண்டிருந்த பிஜு நாராயணனை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பியது. 

தாக்குதலில், அவருக்கு கழுத்து, கால், மார்புப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பாலக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைபெற்றுவருகிறார். பிஜு நாராயணன் மீது தாக்குதல் நடத்தப்படுவது இரண்டாவது தடவை. நான்கு மாதங்களுக்கு முன், பாலக்காட்டில் பிஜுமீது ஆசிட் வீசப்பட்டது. அதிலிருந்து உயிர் தப்பினார். 2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள மகா யாகத்தில், பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த அவர்  பங்கேற்கக் கூடாது எனத் தொடர்ந்து சிலர் அவரை மிரட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது. போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். 

photo courtesy: manorama
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement