Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டான்லி மருத்துவமனையின் அவலத்தை அம்பலப்படுத்திய மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில், சுமார் 7,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin
 

தமிழகத்தில், டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துவருகிறது. இந்நிலையில், சென்னை ஸ்டான்லி  மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகுறித்து அவர் கேட்டறிந்தார். 

stalin
 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ’தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. தமிழகத்தில் சுமார் 7,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் 25 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் 25 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அரசு மருத்துவமனைகளில், நோயாளிகளுக்குப் போதுமான வசதி இல்லை. ஸ்டான்லி மருத்துவமனையில் குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்கவில்லை. ஆனால், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு நோய் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகக் கூறிவருகிறார். தமிழகத்தின் உண்மை நிலவரம் என்ன என்பதை உணர்ந்து, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement