Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மார்ச் மாதத்தில் ரேஷன் கடைகள் மூடப்படுமா?

மாவீரன் பகத்சிங்கின் 110-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சேலம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பாக, 'மூடாதே ரேஷன் கடையை' என்ற முழக்கத்தை முன்னிறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதில் 50-க்கும் மேற்பட்ட  அனைத்திந்திய பெருமன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொண்டார்கள்.

இதுபற்றி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநகரச் செயலாளர் ராஜேஷ், ''மத்திய பா.ஜ.க அரசும், தமிழக எடப்பாடி பழனிசாமி அரசும் சேர்ந்து ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பொது விநியோகத் திட்டத்தை ரத்துசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 34,800 ரேஷன் கடைகள் இருக்கின்றன. இதில் 9000 பகுதி நேர ரேஷன் கடைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மொத்தமாக, அனைத்து ரேஷன் கடைகளையும் மூட திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதன் முன்னோட்டமாக முதலில் 9000 பகுதி நேர ரேசன் கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அடுத்து முழுநேர கடைகளை வரும் மார்ச் மாதத்தில் மூடப்போவதாக தகவல் வந்திருக்கிறது. இச்செயல் ஓர் ஆபத்தான போக்கை ஏற்படுத்தப் போகிறது. அதனால் அரசு ரேசன் கடைகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் பொதுகுழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களைத் திரட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம்'' என்றார்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் மாலன், ''பொதுமக்களுக்கு மானிய விலையில் எந்த பொருள்களையும் வழங்க மாட்டோம் என்று  உலக வர்த்தக மையத்தில் இந்தியா கையெழுத்து போட்டிருக்கிறது. அதையடுத்து ரேசன் கடைகளை மூட திட்டமிட்டிருக்கிறது. அந்திய முதலீட்டாளர்களை வரவழைப்பதோடு அந்நிய நாட்டு பொருள்களின் சந்தையாக இந்தியா மாறப்போகிறது.

அதனால் அந்நிய நாட்டு பொருள்களை வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகப் போகிறது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் இந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற நாடாக இல்லாத சூழ்நிலை உருவாகும் சூழ்நிலை ஏற்படும். விவசாயிகள், நெசவாளர்கள், சிறுகுறு வணிகர்கள் மிகப் பெரிய பாதிப்புக்குள்ளாகப் போகிறார்கள்.

மத்திய அரசின் இந்தத் தவறான கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்காமல் துணைபோய் கொண்டிருக்கிறது. ரேசன் கடைகளைத் தமிழகத்தை மூட விட மாட்டோம். மக்களைத் திரட்டி மிகப் பெரிய போராட்டங்களை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் முன்னெடுக்கும்'' என்றார்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement