Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தாய் கொல்லப்பட்டது அறியாமல், நடுரோட்டில் தவித்த குழந்தை! - திகிலில் உறைந்த திருப்பூர்

திருப்பூர் அருகே, இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு நடுரோட்டில் கிடந்த நிலையில், அருகே அவரின் ஆண் குழந்தை, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியிலிருந்து கோவை நோக்கிச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையொன்று அழுத வண்ணம் அமர்ந்திருந்தது. அவ்வழியே சென்றவர்கள், அந்த குழந்தையைக் கண்டதும், பதற்றத்துடன் அருகில் சென்று பார்த்தபோது, சாலையின் ஓரத்தில் உள்ள முள்புதரில், இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்ததைக் கண்டிருக்கிறார்கள். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், உடல் முழுவதும் ரத்தமாக உயிரற்றுக் கிடந்த அந்தப் பெண்ணைப் பார்த்தவாறே அந்தக் குழந்தை அழுதுகொண்டிருந்ததைக் கண்டு, என்னசெய்வதென்று தெரியாமல் வேதனையில் ஆழ்ந்தனர் அப்பகுதி மக்கள்.

பின்னர், ஊத்துக்குளி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அந்தப் பெண்ணின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆண் குழந்தையும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டது. மேலும், கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் கிடைக்கப்பெறாததால், பெண்ணைக் கொலைசெய்த நபர் யார் என்பது தொடர்பாக போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் பெண், பார்ப்பதற்கு வட மாநிலத்தைச் சேர்ந்தவர் போல இருந்ததால், அருகில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளில் கூலி வேலை செய்யும் வட மாநில மக்கள் வசிக்கும் பகுதியில் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.  இன்னும் பேசக்கூட பழகாத அந்த  குழந்தை, தன் அழுகையை மட்டும் நிறுத்த முடியாமல் தவித்துவருவதைக் காணும் அனைவருமே துக்கத்தில் ஆழ்ந்துபோயினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement