Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசு மருத்துவமனைகளில் தலைவிரித்தாடும் லஞ்சம்: குற்றம்சாட்டும் அறப்போர் இயக்கம்!

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் லஞ்சம் விளையாடுவதாக அறப்போர் இயக்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசு மருத்துவமனை

இக்குற்றச்சாட்டு குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறுகையில், “நகரில் பொது சுகாதாரம் மேம்படுத்தும் நோக்கில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 50 தன்னார்வலர்கள் இணைந்து ஆய்வுப் பணியை மேற்கொண்டோம். அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நடத்திய சர்வே முடிவையே தற்போது வெளியிட்டுள்ளோம்.

இந்த ஆய்வில் மருத்துவமனைகளின் சுகாதாரம், சேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தே ஆய்வு நடத்தினோம். இதில் 73 சதவிகிதம் பேர் மோசமான சுகாதாரம் நிலவுவதாகவே கூறியுள்ளனர். குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழு வேளை செயல்படுவதே இல்லை என்று மக்கள் கவலை கொள்கின்றனர். செயல்படும் மருத்துவமனைகளில் 49 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் அதிகப்படியான மக்கள் தனியார் மருத்துவமனைகளை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்” என்று விளக்கினார்.

’இந்த ஆய்வின் மூலம் ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்த முயற்சிகளையும், மக்களுக்கான சேவையை முன்னெடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்’ என்று கூறுகிறார்கள் இந்தத் தன்னார்வலர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement