மண அலங்காரத்துடன் ஏரிக்குள் குதித்து சிறுவனைக் காப்பாற்றிய மணமகன்!

திருமண நாள் ஒவ்வொருவருக்கும் ஸ்பெஷலானது. திருமணத் தினத்தன்று ஒரு உயிரை காப்பற்ற வாய்ப்பு கிடைத்தால்  இன்னும் ஸ்பெஷலான விஷயம்தானே! கனடாவின் ஒன்டாரியோ நகரில் க்ளேட்டன் குக் - பிரிட்டானி ஆகியோருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்குள்ள, விக்டோரியா பூங்காவில் இருவரையும் ஜோடியாக புகைப்படக்காரர் டாரென் ஹாட் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். 

திருமண அலங்காரத்துடன் சிறுவனை காப்பாற்றிய கிளேட்டன்

இந்த சமயத்தில், பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அங்கிருந்த ஏரிக்குள் விழுந்து உயிருக்குப் போராட. மற்ற சிறுவர்கள் கூச்சலிட்டனர். பதறிப் போன கிளேட்டன் குக் என்ன ஏதுவென்று திரும்ப, சிறுவன் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்தார்..க்ளேட்டன் ஒரு கணம்கூட யோசிக்கவில்லை. திருமணத்துக்காக அணிந்திருந்த ஆடையுடன் அப்படியே ஏரிக்குள் பாய்ந்து தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்த சிறுவனை மீட்டார். க்ளேட்டனின் சமயோசிதமான விரைவான நடவடிக்கையால் சிறுவன் உயிர் பிழைத்துக்கொண்டான். 

இந்தச் சம்பவத்தைப் புகைப்படமாக எடுத்திருந்த, டாரென் ஹாட் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அவற்றைப் பதிவிட்டுள்ளார். உலக மக்களின் வாழ்த்து மழையில் புதுமணத் தம்பதி குளித்துக்கொண்டிருக்கின்றனர். ''தன் கணவரின் தன்னலமற்ற குணமும் சமயோசித புத்தியும்தான் தன்னை கவர்ந்தது'' என பிரிட்டானி பெருமை பிடிபடாமல் கூறுகிறார். 

photo courtesy: HATT

Do you like the story?

Please Appreciate the Author by clapping!