Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினகரனின் கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்!

இரட்டை இலைச் சின்னம் தொடர்பாகக் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல்செய்ய அவகாசம் கேட்ட தினகரனின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிரிந்தபோது இரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரியது. இதையடுத்து, கட்சியின் அதிகாரபூர்வமான சின்னமான இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. சின்னத்துக்கு உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம், சசிகலா  தரப்பினர் லட்சக்கணக்காண ஆவணங்களைத் தாக்கல்செய்தனர். இதுதொடர்பாகத் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, உள்ளாட்சித் தேர்தல் வருவதால் இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணையைத் தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியது. சின்னம் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய இருதரப்பினருக்கும் செப்டம்பர் 29-ம் தேதிவரை அவகாசம் வழங்கியது. மேலும், சின்னம் தொடர்பான இறுதி விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சின்னம் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய மேலும் 15 நாள்கள் அவகாசம் அளிக்கக்கோரி டி.டி.வி. தினகரன் கடிதம் எழுதியிருந்தார். தினகரனின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. மேலும், இரட்டை இலைச் சின்னம் தொடர்பான இறுதி விசாரணை திட்டமிட்டபடி அட்டோபர் 6-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement