Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''பூப்படைதல் முதல் ஓய்வு வரை... பெண்களின் வாழ்க்கைதான் இந்தக் கொலு" -ஜெயந்தி கண்ணப்பன்

ஜெயந்தி கண்ணப்பன்

வ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் வரக்கூடிய நவராத்திரி, பெண்களின் குதூகலத் திருவிழா. தங்கள் கற்பனை சிறகை விரித்து பலரும் வித்தியாசமான தீமில் கொலு வைப்பார்கள். அந்த வரிசையில், சென்னை, கோபாலபுரத்தில் வசிக்கும் ஏ.எல்.எஸ்.புரெடக்‌ஷன் நிறுவனத்தைச் சேர்ந்தவரும் கவிஞர் கண்ணதாசனின் மருமகளுமான ஜெயந்தி கண்ணப்பன், வைத்திருக்கும் கொலு, பார்க்க வந்த அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்தக் கொலு, பெண்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இதுகுறித்து ஜெயந்தி கண்ணப்பன் கூறுகையில்... 

''பெண் இல்லாமல் இந்த உலகம் உருவாகியிருக்காது. தாய்மை, வலிமை, பொறுமை எனப் பல விஷயங்களுக்கு இலக்கணமானவள் பெண். தாயாக, சகோதரியாக, மகளாக ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும் பெண் முக்கியத்துவம் பெறுகிறாள். அவளைச் சிறப்பிக்க வேண்டும் என இந்த வருட நவராத்திரி கொலுவுக்கு 'பெண்' என்கிற 'தீம்'மைத் தேர்ந்தெடுத்தேன். ஒவ்வொரு பெண்ணும் பூப்பெய்தும் பருவம் முதல் முதிர் வயது வரை அத்தனையையும் விளக்கும் விதத்தில் இந்தக் கொலுவை அமைத்திருக்கிறேன். 

 கொலு

பூப்பெய்துதல், பெண் பார்க்கும் படலம், நிச்சயதார்த்தம், திருமணம், திருமணம் உபசரிப்பு, பெண்ணுக்கான சீர்வரிசை, வரவேற்பு நிகழ்ச்சி, வரவேற்பு நிகழ்ச்சியில் கர்நாட்டிக் மியூசிக், நடன நிகழ்ச்சி, வெஸ்டன் மியூசிக், வளைகாப்பு, குழந்தைக்குப் பெயர்வைத்தல், குழந்தைக்குக் காதுகுத்தும் நிகழ்ச்சி, அறுபதாம் கல்யாணம், ஓய்வு வாழ்க்கை எனப் பெண் கடந்துவரும் ஒவ்வொரு நிலையையும் விளக்கும் விதமாகக் கொலு அமைத்திருக்கிறேன். நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரும் பார்த்துவிட்டு, வித்தியாசமான கொலு தீம் எனப் பாராட்டினாங்க. 

என் மாமனார் கண்ணதாசன் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அவருடைய சிலையையும் கொலுவில் வைத்திருக்கிறேன். என்றைக்குமே அவர் எங்களுடனே இருக்கிறார் என்பதை நினைவில் வைத்திருக்கிறேன். 

மூன்று வருடங்களுக்கு முன்னாடி, வேலூர் அருகே திமிரி என்கிற கிராமத்தில் உள்ளவங்க ஒரு விழாவுக்காக என்னைப் பேசக் கூப்பிட்டிருந்தாங்க. பொதுவாகவே, அங்கே பேசும் பிரபலங்களுக்கு கண்ணதாசன் சிலையைப் பரிசாகக் கொடுப்பாங்க. அன்றைக்கு எனக்கும் கண்ணதாசன் சிலையைப் பரிசா கொடுத்தாங்க. அதை அந்த வருஷத்திலிருந்து கொலுவில் வைக்க ஆரம்பிச்சுட்டேன். கோடீஸ்வரர் முதல் வண்டி இழுக்கிறங்க வரை அத்தனை பேர் மனசுக்கும் பிடிச்சவர், கண்ணதாசன். அவருக்கு மருமகளாக வர்றதுக்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்கணும். அவருடைய சிலையை கலசத்துக்குப் பக்கத்திலேயே வெச்சிருக்கோம். அவர் ஒரு வேஷ்டி கட்டிய சரஸ்வதி" என்றவர் தொடர்ந்து, 

''நண்பர்களையும் உறவினர்களையும் இந்தக் கொலுமூலம் சந்திக்க முடியுது. ஒவ்வொரு வருஷமும் அரசியல், சினிமா பிரபலங்கள், ஆன்மீக ஆர்வலர்கள் வந்து பர்ப்பாங்க. இந்த வருஷம் கலைஞர் குடும்பம், சிவாஜி கணேசன் குடும்பம், ஜெமினி கணேசன் குடும்பம், சாரதா நம்பி ஆரூரான், சச்சும்மா எனப் பலரும் வந்திருந்தாங்க. என் மாமியார் 1980-ம் வருஷம் இறந்துப்போனாங்க. நாம் விட்டுட்டுப் போகும் விஷயங்களை யார் ஃபாலோ பண்ணுவா என்கிற எண்ணம் அவங்களுக்கு இருந்துச்சு. அதை நாம் செய்யணும்னு நான் கவனமா இருக்கேன். அவங்க செய்துட்டிருந்த எல்லா விஷயத்தையும் ஃபாலோ பண்ணிட்டிருக்கேன். எனக்கும் வயசாகுது. பல வித்தியாசங்களை உணரமுடியுது. உறவுகளை இன்னும் புதுப்பிக்கவும், தொடரவும் இந்த நவராத்திரி கொலு நிகழ்வு உதவியா இருக்கு. நவராத்திரி மூலமாக ஒழுக்கம், பண்பாடு, நாகரிகம் போன்ற விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தறோம். கொலு பார்க்க வரும் குழந்தைகள், சாமி சிலையைப் பார்த்து சில கேள்விகள் கேட்பாங்க. அவங்களுக்குக் கதைகள் சொல்லி புரியவைப்போம். எங்க வீட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன், சுமங்கலி, விதவை என எந்தப் பாகுபாடும் கிடையாது. கண்ணாடி, சீப்பு, மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு, பூக்கள், பழம், தேங்காய், வளையல், நெயில்பாலிஷ், பொட்டு, காசு என எல்லாத்தையும் ஒரு பையில் போட்டுப் பாகுபாடின்றி கொடுப்போம். என் மாமனார் கண்ணதாசன் எப்படி எம்மதமும் சம்மதம்னு இருந்தாரோ, அதேபோலத்தான் நாங்களும் இருக்கோம்'' என்றார் ஜெயந்தி கண்ணப்பன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement