போலி நிதி நிறுவனம் நடத்திய பி.எஸ்.என்.எல் அலுவலர் கைது

சிவகாசியில் போலி நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி தருவதாக மக்களை ஏமாற்றியதாக பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பிஏசிஎல், கரீமா, எம்ஆர்டிடி, பாசி, டிஸ்க் என்று நூற்றுக்கும் மேற்பட்ட போலி நிதி  நிறுவனங்கள் டெபாசிட்டுகளுக்கும், ஆர்.டிக்கும் அதிக வட்டி தருவதாகக்  கூறி  தமிழகம் முழுக்க மக்களை ஏமாற்றிவிடுகின்றன. இந்த நிதி நிறுவன அதிபர்கள் தங்கள்மீது போடப்பட்ட வழக்குகளிலிருந்து சுலபமாக ஜாமீனில் வெளியில் வந்துவிடுகிறார்கள். ஏமாந்த மக்களோ பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றி ஊடகங்களில் செய்திகள் வந்தாலும் புதுப்புது பெயர்களில் போலி நிறுவனங்கள் உருவாகிக் கொண்டுதானிருக்கிறது. அவர்களிடம்  பணம் கட்டி மக்கள் ஏமாந்துகொண்டுதானிருக்கிறார்கள். 

போலிநிதிநிறுவனம்


விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 'விருட்சம் அக்ரோ லிமிட்டெட்' என்ற பெயரில் இயங்கி வந்த நிதிநிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக மக்களிடம் பணம் டெபாசிட் வாங்கியதாகப் புகார் தொடர்ந்து வந்ததால், மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவினர் அதன் இயக்குநரில் ஒருவரான ராதாகிருஷ்ணன் என்பவரைக் இன்று கைதுசெய்துள்ளனர். இவர் சிவகாசி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இளநிலை தொலைத்தொடர்பு அலுவலராக பணிபுரிகிறார். பல கோடி ரூபாய்களை மக்களிடம் வசூலித்து ஏமாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.  இவருடன் சேர்ந்து ஏமாற்றிய மற்றவர்களையும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!