Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருச்சி ஏரியில் விதைப் பந்து தூவிய மாணவர்கள்!

திருச்சி குண்டூர் ஏரியில் இன்று மக்கள் பாதை இயக்கம் சார்பாக விதைப் பந்து தூவும் திருவிழா நடைபெற்றது.

திருச்சி ஏரியில் விதை பந்து தூவிய மாணவர்கள் திருச்சி - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், விமான நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் குண்டூர் பெரிய ஏரி அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 350 ஏக்கர். 600 ஏக்கர் விளைநிலங்கள் இந்த ஏரியால் பாசன வசதி பெறுகின்றன. இதில் தற்போது மண்மேடுகள் உருவாகி இருந்தது. நீர் தேக்கும் கொள்ளளவு மிகவும் குறைந்து இருந்ததால் தண்ணீர் பிடிப்பு பாதித்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், திருச்சி  மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையின் ஒத்துழைப்போடு, பொது மக்கள் குண்டூர் பெரிய ஏரியை தூர்வாரினார்கள்.

இந்நிலையில், திருச்சி தனியார் கல்லூரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, இந்த ஏரியில் விதைப்பந்துகளை தூவினர். இந்த விதைப்பந்து தூவும் நிகழ்ச்சியில், மாணவர்களும், மாணவிகளும் ஆர்வமுடம் கலந்துகொண்டனர். இந்தப் பணியை அப்பகுதி மக்கள், மாணவர்களை மிகவும் பாராட்டினர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement