Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குருபூஜை: பசும்பொன்னில் தென்மண்டல ஐ.ஜி ஆய்வு

தேவர் குரு பூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் தென்மண்டல ஐ.ஜி இன்று ஆய்வுமேற்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அமைந்துள்ளது பசும்பொன் கிராமம். இங்குள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ல் குருபூஜை நடப்பது வழக்கம். அக்டோபர் 28 அன்று தொடங்கும் குருபூஜை விழா அரசியல்விழா, ஆன்மிக விழா, குருபூஜை என 3 நாள்கள் நடைபெறும். இதில் இறுதி நாளன்று நடைபெறும் குருபூஜையில் அரசியல் கட்சித் தலைவர்கள், முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்கள் என பலரும் பங்கேற்பதுடன் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்களும் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவர்.

 

குருபூஜை முன்னிட்டு பசும்பொன்னில் ஐ.ஜி ஆய்வு

இந்த ஆண்டு தேவர் நினைவிடத்துக்கு கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. மேலும், இந்த 110-வது ஆண்டு குருபூஜையில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, குருபூஜை தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி (பொறுப்பு) பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் இன்று பசும்பொன்னில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், 'அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ள குருபூஜைக்கு வழக்கமாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். குருபூஜையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்பது குறித்து விரைவில் தெரியும். அதன்பின்னர் மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும்'  என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement