வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (28/09/2017)

கடைசி தொடர்பு:23:00 (28/09/2017)

இந்தியாவில் அதிக செல்வாக்குள்ள பெண் மித்தாலி ராஜ்!

மித்தாலி ராஜ்

பி.பி.சி வெளியிட்டுள்ள 2017-ம் ஆண்டுக்கான உலகின் நூறு செல்வாக்குள்ள பெண்களில் மித்தாலி ராஜ் பெயரும் இடம் பெற்றுள்ளது. மேலும், இந்தப் பட்டியலில் எழுத்தாளர் இரா திரிவேதி, தொழில்நுட்ப கல்வி பயிற்றுவிக்கும் நிறுவனம் ஒன்றின் நிறுவனர் அதிதி அவாஸ்த்தி, நடிகர் நவாசுதீன் சித்திக்கின் தாயார் மெஹ்ரூனிசா சித்திக், டாக்டர் ஊர்வஷி ஷாஹினி, பிரியங்கா ராய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பெண்களின் பெயர்கள், அவர்கள் சந்தித்த பிரச்னைகள், அவர்கள் அதை எதிர்கொண்ட விதத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.

உலகம் முழுக்க பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளை கடந்துவந்து சாதித்திருக்கும் 60 பெண்களின் பட்டியல் கடந்த புதன்கிழமை வெளியிட்டிருக்கும் பி.பி.சி, மீதம் உள்ள 40 பெண்களின் பட்டியலை வரும் நாள்களில் வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், உலகம் முழுவதும் சிலிக்கான் வேலியில் இருந்து விளையாட்டுத்துறை வரை பெண்களுக்கு இருக்கும் பிரச்னைகளைப் பற்றி ஆராயவும் அதற்கு தீர்வைக் கண்டறியவும் நான்கு குழுக்களாகப் பெண்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.