Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிதா விதைத்த விதையிலிருந்து அடுத்த தலைமுறைக்கான கனிகள் உருவாகும்..! மு.க.ஸ்டாலின் உருக்கம்

நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் நினைவுப் படத்தை தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

anitha


நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அனிதா செப்டம்பர் 1-ம் தேதி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். அவருடைய இறப்பைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெருமளவில் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், அனிதாவின் படம் திறப்பு விழா சென்னை பெரியார் திடலில் தி.க.தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.

அந்த விழாவில் மு.க.ஸ்டாலின், அனிதாவின் குடும்பத்தினர், திருமாவளவன், தனியரசு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மு.க.ஸ்டாலின் அனிதாவின் படத்தைத் திறந்துவைத்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 'மாணவி அனிதா விதையாகி இருக்கிறார். அந்த விதையில் அடுத்த தலைமுறைக்கான கனிகள் உருவாக இருக்கிறது' என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement