Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்டோபர் 2-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் அடைப்பு -ஆட்சியர் அறிவிப்பு

அக்டோபர் 2-ம் தேதி, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபானக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் அடைப்பு - சந்தீப் நந்தூரி

காந்தி ஜெயந்திக்குத் தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி, நெல்லை மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் அன்றைய தினம் அடைக்கப்பட்டிருக்கும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’அரசாணை எண் 50, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, தமிழ்நாடு மதுபானம் உரிமம் மற்றும் அனுமதி விதிகள், சென்னை ஆணையர் மதுவிலக்கு மற்றும் ஆயம் கடிதம் ஆகியவற்றின்படி அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தால் நடத்தப்படும் மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மற்றும் மதுபான அனுமதி பெற்ற கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என ஆணையிடப்படுகிறது. எனவே, நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அக்டோபர் 2-ம் தேதி மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement