Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான வழக்கு முடித்துவைக்க உத்தரவு ..!

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக திண்டுக்கல்லைச் சேர்ந்த சபாபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் "அரசியல்வாதி என்ற முறையில் நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது டிரைவரும் எனக்கு நல்ல பழக்கம். இந்நிலையில் நத்தம் விஸ்வநாதனின் டிரைவர் கண்ணன் 19 லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டை என்னிடமிருந்து வாங்கி, அவரது மனைவி வினோதா பெயரில் பதிவு செய்தார்.

அதைத்தொடர்ந்து நாங்கள் நண்பர்களான நிலையில் அவரிடமிருந்து 10 லட்ச ரூபாயைக் கடனாகப் பெற்றேன். அதற்குப் பிணையாக 7 மற்றும் 3 லட்ச ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினேன். நான் பணத்தைத் திரும்ப வழங்கிய நிலையிலும், பிணையாக வழங்கிய காசோலையை என்னிடம் கண்ணன் திருப்பி வழங்கவில்லை. அதேபோல முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நாடாளுமன்ற தேர்தல் செலவுகளுக்காகப் பலரிடம் பணம் பெற்ற நிலையில், என்னிடமும் பணம் பெற்றார். திருப்பிக் கேட்டதற்கு தரமறுத்தார். மேலும் எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கைகளும் காவல்துறை சார்பாக எடுக்கவில்லை.

ஆகவே முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அவரது ஓட்டுநர் கண்ணன் உள்ளிட்டோர்மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி முரளிதரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் மனுதாரரின் புகார் குறித்து விசாரித்ததாகவும், அதில் போதிய முகாந்திரம் இல்லை எனவும் தெரிய வந்த நிலையில், புகார் முடித்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதைப் பதிவு செய்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement