Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நொய்யல் ஆற்று சோப்பு நுரை விவகாரம்..! அமைச்சருக்கு விவசாயிகள் கண்டனம்

திருப்பூர் நொய்யல் ஆற்றில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அலையலையாக நுரை பொங்கி ஓடிய சம்பவம் பொதுமக்களிடையே மிகப்பெரும் அச்சத்தை உண்டாக்கியிருந்தது. திருப்பூரில் செயல்பட்டு வரும் சாய ஆலைகள், சட்டவிரோதமாக, திட்டமிட்டே நொய்யலாற்றில் கழிவுநீரைக் கலந்துவிட்டதால்தான், இப்படி நுரை பொங்கி ஓடியதாகப் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டினர்.  அதுதொடர்பாக ஆய்வு செய்ய வந்த தமிழகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன், "நொய்யலாற்றில் நுரைப் பொங்கியதற்கு கோவை மக்கள் வீடுகளில் சோப்புப் பயன்படுத்துவதுதான் காரணம்" என்றார். அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்குத் தமிழகம் முழுவதும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் அமைச்சர் கே.சி கருப்பணனுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர் விவசாயிகள்.

தமிழகத்தில் அனைத்துப் பகுதி மக்களும் வீடுகளில் சோப்புகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் கோவை மக்கள் பயன்படுத்தும் சோப்புகள்தான் நுரையை ஆற்று வெள்ளமாகப் பொங்க வைத்துவிட்டது என்று கூறியிருக்கும் அமைச்சரை என்னவென்று சொல்வது.
நொய்யலில் பொங்கியது சோப்பு நுரைகள்தான் என்று எவ்வித ஆய்வும் செய்யாமல் அமைச்சர் அலட்சியமாகப் பதிலளித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சாயநீர் தொடர்ச்சியாகச் சுத்திகரிப்பின்றி திருப்பூரின் பல்வேறு இடங்களில் வெளியேற்றப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள் என்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement