Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காரைக்குடி ரயில் நிலையத்தை ஆய்வு செய்த ரயில் பயணிகள் வசதிக்குழு..!

 

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் வசதிக்குழுப் பார்வையிட்டு பல்வேறு குறைபாடுகளைக் கண்டறிந்து சென்றிருக்கிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி முக்கியமான நகரம். இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு ரயில் போக்குவரத்து வசதி இருக்கின்றது. மத்திய அரசு தமிழகத்திற்கு அறிவித்த ரயில் திட்டத்தில், காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை அகல ரயில்பாதை அறிவிக்கப்பட்டது. அதன் பணிகள் பட்டுக்கோட்டை வரை தற்போது நடந்து முடிந்திருக்கும் நிலையில் ரயில் பயணிகள் வசதிக்குழு இன்று திருச்சி மற்றும் காரைக்குடிக்கு வருகை தந்தது. மதியம் 1 மணியிலிருந்து பத்திரிகையாளர்கள் இந்தக் குழு வருகைக்காகக் காத்திருந்தார்கள். ஆனால், இக்குழு வந்தது. மாலை 4 மணிக்கு மேல் பயணிகள் கூடியிருந்த நேரத்தில் குழு உறுப்பினர்களை, அதிகாரிகள் அழைத்துவராமல் காரைக்குடியில் உள்ள தாபா ஓட்டலில் தங்கவைத்து காலம் தாழ்த்தியே அழைத்து வந்தார்கள். ரயில் நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது. 
ரயில் நிலையத்தை ஆய்வு செய்த உறுப்பினர்கள் உயர் வகுப்புப் பயணிகள் ஓய்வறையைப் பார்வையிட்டனர். அந்த அறையில் ஏசி இல்லை. பயணிகள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் மின்விசிறி பற்றாக்குறையாக இருந்தது.

பயணிகள் குடி தண்ணீர் குழாய் தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக இல்லாததைக் கண்டு அதிகாரிகளைக் கடுகடுத்தது இக்குழு. மேற்கூரை இல்லாத இடங்களில் மேற்கூரை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்தார்கள். அதே நேரத்தில் மேற்கூரையிலிருந்து வெளியேறும் மழைத் தண்ணீர் குழாய்கள் உடைந்திருப்பதையும் பிளாட்பாரம் தரைதளங்கள் சேதமடைந்தும் கிடந்தது. ஒரு சில இடங்கள் குண்டும் குழியாக இருப்பதைப் பார்த்து திறந்தவெளி கழிப்பறை மாதிரி இருக்கு முதலில் இதையெல்லாம் சரி செய்யுங்கள் என்றது இக்குழு. முதல் வகுப்பு பயணிகள் இறங்கும் பிளாட்பாரம் மேற்கூரை இல்லாமல் இருக்கிறது. நான்கு பிளாட்பாரம்களை இணைக்கும் நடைமேம்பாலம் அமைக்க உத்தரவிட்டது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement