Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதிகாரிகள் தீவிர நடவடிக்கை..! கன்னியாகுமரியில் டெங்கு தாக்கம் குறைவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதுபோல காது, மூக்கு, தொண்டை நோய் பிரச்னையும் கணிசமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு கேரளாவில் அளவுக்கு அதிகமாக டெங்கு காய்ச்சல் சீக்கிரமாகப் பரவியது. அதன் தாக்கம் குமரிமாவட்டத்திலும் பரவியது. நோய் பாதித்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதுமாக கலெக்டர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உத்தரவின்படி டெங்குக் காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டன. இதனால் தொடக்கம் முதல் டெங்குக் காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் இருந்தது.

குமரி மாவட்டத்தில் தற்போது கணிசமான அளவு மழை பெய்து வருகிறது. டெங்குக் காய்ச்சலின் தாக்கமும் குறைந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 4,500 ஊழியர்கள் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் பாதிப்பு  குறைந்து காணப்படுகிறது. தற்போது ஆசாரிபள்ளம் அரசு மருத்துவனையில் தனி வார்டில் மட்டும் 3 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதுபோல தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்குவைக் கட்டுப்படுத்த சுற்றுப்புறத்தைச் சுகாதாரமாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் முழுக்கவனம் செலுத்துமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement