Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மனித உரிமைகள் குறித்த புரிதல்கள் அவசியம்..! பேராசிரியர் சந்திர போஸ்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மற்றும் அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் நிதியுதவியுடன் ஏற்பாடு செய்த நீதி மற்றும் மனித உரிமைகளில் தற்காலப்  பிரச்னைகள்  என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம் இன்று தொடங்கியது. 


இத்தேசியக் கருத்தரங்கினை அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பேராசிரியர் பெ.சுபாஷ் சந்திரபோஸ் தலைமையேற்றுத் தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், 'மனித உரிமைகள் மீறப்படுவதை வெளிக்கொணர தடுக்க, மனிதஉரிமைகள், சட்ட வழிமுறைகள் பற்றிய அறிவும் புரிதலும் அவசியம். இந்த விழிப்புஉணர்வினை வளர்க்க, சட்ட வழிமுறைகள் செயலாக்கத்தக்க வகையில் எளிமைப்படுத்தப்படல் வேண்டும். மனித உரிமைகள்மீதான குற்றங்களைக் குறைக்கும் வழிமுறைகள் பற்றிய ஆய்வுகளை முன்னெடுக்கவே இந்த இரு நாள் தேசியக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

உலகமெங்கும் மனித உரிமைகள் தினந்தோறும் மீறப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இந்திய அளவில் இதுகுறித்து நாம் பேசும்போது, "ஊடக செயல்பாட்டாலும், கல்வி வளர்ச்சியாலும் உடன்கட்டை ஏறுதல்,சிசுவதை, சில தீண்டாமைக் குற்றங்கள் குறைந்தாலும் புதிய வடிவிலான மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்து கொண்டேதான் உள்ளன. பெண்ணுரிமை மீறல்கள், அடக்குமுறை, மத வன்முறைகள், குழந்தைத் தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் இருக்கின்றன. பாலியல் பலாத்காரம், வீடுகளில் பெண்களுக்கு எதிரான வன்முறை, வரதட்சணைத் தொடர்பான கொலைகள், ஆணவக் கொலைகள், பாலியல் தொல்லைகள், பெண்களுக்கு எதிரான பேதம் ஆகியவை மிகவும் கொடிய சமூகப் பிரச்னையாக உள்ளது.  

சமீபத்திய தரவுகளின் படி, ஒவ்வோர் ஆண்டும் சுமார் 5% அளவிற்கு குழந்தைகள்மீதான குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் மூன்று இலட்சம் குற்றங்கள் பெண்ணுரிமைக்கு எதிராகவும் மற்றும் சாதிய ரீதியிலும் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவில் 13 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் ஆரம்பக் கல்வியைக்கூட முடிக்காதநிலையில் இருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. சில குழந்தைத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர். 1948-ஆம் ஆண்டில் மனித உரிமைகள் சாசனம் வரையறுக்கப்படும் முன்னரே ராஜாராம் மோகன்ராய், பண்டித ராமாபாய், அயோத்திதாசர், தந்தை பெரியார், அம்பேத்கர் போன்ற சமூகச் சிந்தனையாளர்கள் இந்திய மற்றும் மாநிலஅளவில் மனித உரிமைகளுக்காகப் போராடி வந்தனர். மனித உரிமைகள் அதிக அளவில் நசுக்கப்படுவதாலேயே சட்டங்கள் வகுத்துக் காக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது' என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement