வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (11/09/2012)

கடைசி தொடர்பு:17:40 (11/09/2012)

மக்களின் பாதுகாப்புக்காக சரணடைய தயார்: உதயகுமார்

நெல்லை: கூடங்குளம் சுற்றுவட்டார மக்களின் பாதுகாப்புக்காக காவல்நிலையத்தில்  சரணடைய தயாராக இருப்பதாக அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு  ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உதயகுமார் கூறியிருப்பதாவது:”நாங்கள் ஆயுதம் எடுத்து போராடுவதாக  இருந்தால் 400 நாட்களுக்கு முன்பே அதை செய்திருப்போம். ஆனால் அமைதி வழியில்  போராட்டம் நடத்தியோரை கொடுமையாக தாக்கியிருக்கிறது காவல்துறை.

கூடுதலாக போலீஸ் படையை திரட்டி வரப்போவதாக மக்களிடையே அச்சத்தை  உருவாக்கியிருக்கின்றனர்.இந்த நிலைமை நீடிக்காமல் இருக்க, வன்முறை தொடராமல்  இருக்க, நாங்கள் போலீசில் சரணடைய தயாராக இருக்கிறோம்.

மக்களின் பாதுகாப்புக்காக இன்று இரவு 9 மணிக்கு முக்கிய அரசியல் தலைவர் ஒருவர்  முன்னிலையில் கூடங்குளம் காவல்நிலையத்தில் போராட்டக் குழுவினராகிய நாங்கள்  சரணடைய தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்