Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அனிதாவைத் தற்கொலைக்குத் தூண்டியிருந்தால் நடவடிக்கை..! ஆதிதிராவிடர் தலைவர் முருகன் அறிவிப்பு

அரியலூர் மாணவி அனிதாவைத் தற்கொலைக்குத் தூண்டியதாக விசாரணையில் நிரூபிக்கப்பட்டால் வன்கொடுமை சட்டத்தின் கீழ்  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய ஆதிதிராவிட நலத்துறையின் துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஆதிதிராவிட நலத்துறையின் துணைத் தலைவர் முருகன், புதுச்சேரி ஆதிதிராவிடநலத்துறையின் செயலர் மிஹிர் வர்தன், காவல்துறை டி.ஜி.பி  சுனில்குமார் கவுதம், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு ஆதிதிராவிட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். 

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஆதிதிராவிட நலத்துறையின் துணைத் தலைவர் முருகன், புதுச்சேரியில் ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி வேறு திட்டங்களுக்குச் செயல்படுத்தப்படுவதாக பல்வேறு அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.  அதனால் புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எஸ்.டி., எஸ்.சி., மக்களுக்காகச் செலவிடப்பட்டுள்ள நிதி குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.

 மேலும் ஆதிதிராவிட மக்களுக்குப் பணி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்டவைகளில் 16% இடஒதுக்கீடு முறையாக  நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஆதிதிராவிட மக்களுக்கான  திட்டங்கள்குறித்த கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திடாமல் அம்மக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு வந்திருக்கிறது. அதுகுறித்து ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்துப் பேசுவேன். 

அதேபோல தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதா ஏற்கெனவே பி.வி.எஸ் படிப்பில் சேர்ந்திருந்தார். வேளாண் படிப்பு  படிப்பதற்கு அவர் தயாராக இருந்த நிலையில்தான் அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். அனிதாவைத் தற்கொலை  செய்துகொள்ள யாரேனும் தூண்டிவிட்டார்களா? எனச் சந்தேகிக்கப்படுகிறது. அரியலூர் எஸ்.பி தலைமையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.  அப்படித் தற்கொலைக்குத்  தூண்டியதாக நிரூபிக்கப்பட்டால் அவர்கள்மீது எஸ்.சி, எஸ்.டி, வன்கொடுமை  தடுப்புச் சட்டம், தற்கொலைக்குத் தூண்டியது உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement