வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (29/09/2017)

கடைசி தொடர்பு:11:28 (29/09/2017)

கைதியின் குழந்தைக்குப் பால் கொடுத்த போலீஸ் அதிகாரி!

சீனாவில் சிறைக்கைதியின் குழந்தைக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் தாய்ப்பால் ஊட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது. 

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்த போலீஸ்

மத்திய சீனாவில் உள்ள, ஷாங்ஸி ஜிங்ஸாங் நீதிமன்றத்தில் பெண் ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அந்தப் பெண்ணுக்கு 4 மாத கைக்குழந்தை உண்டு. நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்தபோது, அவரின் குழந்தை ஹாவோ லினா என்றபெண் போலீஸ் அதிகாரியிம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தாயைப் பிரிந்த குழந்தை பசி காரணமாக அழத் தொடங்கியது. பசியால் துடித்த அக்குழந்தையின் அழுகையை லினாவால் நிறுத்த முடியவில்லை.  

தொடர்ந்து, சற்றும் யோசிக்காமல் ஹாவோ லினா குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டினார். இதை, மற்றொரு பெண் போலீஸ் புகைப்படமாக எடுத்து இணையத்தில் வெளியிட, அது வைரலாகியுள்ளது. நீதிமன்றத்தின் இணையதளத்திலும் ஹாவோ லினா குழந்தைக்குப் பால் கொடுக்கும் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. 

இது குறித்து ஹாவோ லினா கூறுகையில், ''தாயைப் பிரிந்ததிலிருந்து குழந்தை அமைதியற்று இருந்தது. என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. தாய்ப்பால் கொடுத்த பிறகே அமைதியானது. எனக்கு, இதே நிலை ஏற்பட்டாலும், என் குழந்தைக்கு யாராவது தாய்ப்பால் ஊட்டுவார்கள். போலீஸ் அதிகாரிகள் கடைமையைக் காட்டிலும் மனித நேயத்துடன் இருக்க வேண்டியது அவசியம்'' என்றார். 

ஹாவோ லினாவின் செயலை உயர் போலீஸ் அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டினர். இணையத்திலும் அவருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க