Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’கொசு உற்பத்திப் பண்ணையாகி வரும் சென்னை!’ - குற்றம்சாட்டும் முன்னாள் மேயர்

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சல் தொடர்பாக முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி முன்னாள் சென்னை மேயரும் எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன் கேட்டறிந்தார். 


 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் ‘கொசு உற்பத்திப் பண்ணையாக சென்னை மாறி வருகிறது. தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலுக்கு 400 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்று குற்றம்சாட்டியுள்ளார். நேற்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அரசு மருத்துவமனைகளில் போதுமான வசதிகளில் இல்லை என்று குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், காலரா தொற்று மருத்துவமனை மற்றும் தண்டையார்பேட்டை புறநகர் மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்து டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவர்களை சந்தித்து நிலைமையை கேட்டு அறிந்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சுதர்சனம், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை தடுக்க தவறிய மாநகராட்சியை கண்டித்தார். இந்நிகழ்வில் கிழக்கு பகுதி பொறுப்பாளர் என்.மருதுகணேஷ் மேற்கு பகுதி செயலாளர் ஏ.டி.மணி முன்னாள் எம்எல்ஏ இரா.மதிவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement