Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பரிவேட்டை செல்லும் பகவதி அம்மன் - பாதுகாப்புப் பணிகள் தீவிரம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா கடந்த 21-ம் தேதி தொடங்கியது. அந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம் 10-ம் நாள் நடக்கும் பரிவேட்டைதான். அந்த நிகழ்வு நாளை  பகல் 12 மணிக்கு நடக்கவிருக்கிறது. அதைத் தொடர்ந்து நாளை பகல்  12 மணிக்கு பகவதி அம்மன் எலுமிச்சை பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி காட்சி தருவார். பின்னர் கோவிலிலிருந்து பகவதி அம்மன் ஊர்வலமாகப் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரம் சென்று அடைவார்.

அங்கு அம்மன் வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் மாவட்டம் முழுவதிலுமிருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள்.அதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. துரையின் உத்தரவின் படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 2 டி.எஸ்.பி.களும் 10 இன்ஸ்பெக்டர்களும் 20 சப் இன்ஸ்பெக்டர்களும், 250 போலீஸாரும், 50 ஊர்க்காவல் படையினரும், 20 போக்குவரத்து போலீஸாரும் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement