நாகர்கோவிலில் கஞ்சா வியாபாரிகளைப் பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டை!

நாகர்கோவிலிலிருந்து கேரளாவுக்குச் சென்ற கேரள அரசு பஸ்ஸை அமரவிளை சோதனைச் சாவடியில் சோதனை செய்த போது 2 அரை கிரை கஞ்சா சிக்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தொடர்ச்சியாக கேரளாவுக்குத் தங்கம், கஞ்சா, அரிசி மண்எண்ணெய், ஆற்று மணல், பாறை கற்கள் போன்றவை கடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்குச் சென்ற அரசுப் பேருந்தை அமரவிளையில் கேரள மாநில மதுவிலக்கு போலீஸார் சோதனை செய்தனர். பயணிகளின் பொருள்களை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது பேக் ஒன்றில் பிளாஸ்டிக் பையில் 2 அரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைப் பறிமுதல் செய்து விசாரித்ததில் அதைக் கடத்திக்கொண்டு வந்தது தெரிய வந்தது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ராஜன் என்று போலீஸார் கண்டுபிடித்தனர். ராஜனைக் கைது செய்து போலீஸார் விசாரணை செய்ததில் கஞ்சாவை, நாகர்கோவிலிலிருந்து வாங்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து ராஜனுக்குக் கஞ்சாவை விற்றது யார் என போலீஸார் விசாரனை செய்து வருகின்றனர்.

நாகர்கோவிலில் உள்ள கஞ்சா வியாபாரியைப் பிடிக்க கேரள மற்றும் குமரி போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்புதான் நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரத்துக்குச் சென்ற அரசு பஸ்சில் கஞ்சாவைக் கடத்தியதாக சுகுணன் என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 அரை கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. நாகர்கோவிலில் இருக்கும் கஞ்சா மொத்த வியாபாரிகளைப் பிடிக்க இரு மாநில போலீஸாரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!