திருச்சி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள்!

ஹோட்டல்மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவரைப் பொய்யான குற்றச்சாட்டில் போலீஸார் கைது செய்ததாகக் கூறி வழக்கறிஞர்கள் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
 
 
முற்றுகை

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகில் உள்ளது மகஷே் என்பவருக்குச் சொந்தமான செந்தூர் ரெசிடென்சி எனும் உணவு விடுதி. இந்த விடுதியில் இன்று காலை 6 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசிச் சென்றனர். இதில் செந்தூர் ரெசிடென்சி ஹோட்டலின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. 
 
சம்பவ இடத்துக்கு வந்த திருச்சி கண்டோன்மென்ட் காவல்துறை ஆய்வாளர் விஜயபாஸ்கர், ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வந்தார். ஹோட்டல் உரிமையாளர் மகேஷ் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரகுமார் என்பவரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி வழக்கறிஞர்கள், கண்டோன்மென்ட் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல்நிலையத்துக்குள் திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் சக்தி கணேஷ் உள்ளிட்டோர் இருப்பதால் வழக்கறிஞர்களை அப்புறப்படுத்த வேண்டி காவல் நிலையம் முன்பாக போலீஸார்  குவிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் ராஜேந்திரகுமாரை போலீஸார் கைது செய்ய இருப்பதாக வெளியான தகவலை அடுத்து திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!