'கடற்கரையில் சிவாஜி சிலை நிறுவப்பட்டால் நன்றாக இருக்கும்!' - நடிகர் பிரபு விருப்பம்

நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் சென்னை அடையாறு பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மணிமண்டபத்தைத் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைப்பார் என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு, 'அரசின் நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறியுள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசும் பிரபு

இது குறித்து அவர் மேலும், 'சிவாஜியின் மணிமண்டப திறப்பு விழாவுக்கு முதல்வர் உட்பட அனைவரும் வர வேண்டுமென்று நான் விருப்பப்பட்டேன். ஆனால், அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மகிழ்ச்சியளிக்கிறது. 1-ம் தேதி முதல்வருக்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இருப்பதால்தான் வர முடியவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் அனைவருக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஜினி, கமல்ஹாசன் ஆகியோர் வந்தால் சந்தோஷப்படுவோம். மெரினா கடற்கரையில் இருந்த சிவாஜி சிலையை அகற்ற நீதிமன்றம்தான் உத்தரவிட்டது. எனவே, அதைப் பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை. அதே நேரத்தில், கடற்கரையில் சிவாஜி சிலை இருந்தால் நன்றாக இருக்கும்' என்று கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!