Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஜெயலலிதாவைப் பார்த்தேனா? இல்லையா?' - இதுதான் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து

Chennai: 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து, தமிழ்நாட்டு அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தற்போது தெரிவித்து வருகின்றனர். இதனால், ஜெயலலிதா மரணம்குறித்து மேலும் பல கேள்விகளும் சந்தேகங்களும் எழும்பியுள்ளன. இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ அல்லது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆதலால், எதிர்க்கட்சிகள் இந்தச் சம்பவம்பற்றி பொதுத் தளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதா மரணம்பற்றி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் ஜெயக்குமார்

இன்று, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 'ஜெயலலிதாவைப் பார்த்தேனா இல்லையா என்பது பற்றி விசாரணை கமிஷன் நீதிபதியிடம் தெரிவிப்பேன். அதுகுறித்து இங்கு கருத்து கூற முடியாது. ஜெயலலிதாவை யார் யார் பார்த்தார்கள் என்று அவரவர்களுக்குத்தான் தெரியும். அதைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை' என்றவர்,  'டெங்கு காய்ச்சல்குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம். டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது' என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement