Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விசாரணை கமிஷன் ஆணையராகப் பொறுப்பேற்றார் ஆறுமுகசாமி!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால், அதை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைத்து உத்தரவுப் பிறப்பித்தது, தமிழக அரசு. இந்நிலையில் இன்று, ஜெயலலிதா மரணம்குறித்து விசாரணை நடத்தும் தலைவராக, நீதிபதி ஆறுமுகசாமி பொறுப்பேற்றுள்ளார்.

ஆறுமுகசாமி

அ.தி.மு.க-வின் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்தவுடன், ஜெயலலிதா மரணம்குறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் அறிவித்தார். 

அதன்படி, இன்று பொறுப்பேற்ற ஆறுமுகசாமி, சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் ஆலோசனை வழங்கிவருகிறார். ஓரிரு நாளிலேயே நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்குகிறார். ஜெயலலிதா மரணம்குறித்து விவரம் தெரிந்தவர்கள், நீதிபதியிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

'ஜெயலலிதா மரணம்குறித்த விசாரணையை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும்' எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துவரும் வேளையில், ஆறுமுகசாமி இன்று தனது பணியைத் தொடங்குகிறார். 

தமிழக அமைச்சர்கள், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பார்த்ததாகச் சொன்னவர்கள், தற்போது பார்க்கவே இல்லை எனப் பேசிவருகிறார்கள். இதனால், அமைச்சர்களும் நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை வளையத்துக்குள் வருவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement