’நான்கு நாளில் ஆட்சி கவிழ்க்கப்படும்’: விஜயகாந்த் கணிப்பு!

காரைக்குடியில் நடைபெற்ற தே.மு.தி.க செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”வரும் அக்டோபர் 2-ம் தேதி மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். அவர்களுக்கு தே.மு.தி.க ஆதரவு அளிக்கும். அன்றைய தினம் நாம் யாரும் பெட்ரோல் போடுவதில்லையென்று தீர்மானிக்க வேண்டும். அதற்கு பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். இந்தியா முழுவதுமாக ஒரே வரி என்று சொல்லும் அரசு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வு கொண்டுவந்தால் தே.மு.தி.க எதிர்க்கும். புதிய ஆளுநர் விஜய தசமி அன்று வந்திருக்கிறார். இன்னும் நான்கு நாள்களில் ஆட்சி கவிழ்ந்து விடும்” என்றார். 

மேலும் அவர் கூறுகையில், “நல்ல இந்தியா அமைய வேண்டுமானால் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம். அதேபோல் தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள். தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினுக்குக் கூடும் கூட்டம் பணத்துக்கானது. ஆனால், எனக்குக் கூடிய கூட்டம் அப்படியல்ல. நொய்யலாற்றில் வரக்கூடிய நுரை, மக்கள் சோப்பு போட்டு குளிக்கும்போது வருகிறது என்கிறார் அமைச்சர். நம்ம அமைச்சர்கள் எவ்வளவு அறிவாளிகள் பாருங்கள்’ என நக்கலாகப் பேசினார் விஜயகாந்த் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!