அடுத்த வாரம் பரோலில் வெளியே வரப் போகிறாரா சசிகலா!? | Sasikala to get a week parole, sources

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (30/09/2017)

கடைசி தொடர்பு:21:10 (30/09/2017)

அடுத்த வாரம் பரோலில் வெளியே வரப் போகிறாரா சசிகலா!?

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, உடல்நலமின்றி இருக்கும் தனது கணவர் நடராஜனைக் காண பரோலில் அடுத்த வாரம் வெளியே வர உள்ளார் என்று தகவல் வந்துள்ளது.

நடராஜன் மற்றும் சசிகலா


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மிக நெருங்கிய தோழி சசிகலா. ஜெயலலிதாவுக்கு வலது கரம் போலவே அவரும் அவரது குடும்பமும் பல ஆண்டுகளாக இருந்து வந்தனர். அ.தி.மு.க-விலும் இவர்களது செல்வாக்கு கொடி கட்டிப் பறந்தது. ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் இந்த நிலை தலைகீழாக மாறியது. அ.தி.மு.க-வில் உட்கட்சி குழப்பம் உச்சத்தில் இருந்தபோது, சசிகலாவுக்குப் பேரிடியாக அமைந்தது சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு. அந்த வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததையடுத்து பெங்களூரில் இருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது, சசிகலாவின் கணவர் நடராஜன் சில நாள்களாகவே உடல் நலம் சரி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். இதையொட்டி அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் கல்லீரலும் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அவருக்கு உறுப்பு மாற்று சிகிச்சையை அடுத்த வாரம் செய்ய உள்ளார்களாம். இந்த சிகிச்சையைச் செய்வதற்கு முன் அவரது மனைவி சசிகலா சிறையிலிருந்து பரோல் மூலம் வெளியே வந்து கணவரைக் காண உத்தேசித்திருக்கிறார். இதற்காக சசிகலா, சில நாள்களுக்கு முன்னர் பரோல் கேட்டு சிறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். இதையடுத்து, நடராஜனின் உடல்நிலை குறித்து விசாரிக்க இன்று அல்லது நாளை கர்நாடக போலீஸ் சென்னைக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது. அப்படி அவர்கள் விசாரித்து முடித்த பின்னர், சசிகலாவுக்கு ஒரு வார பரோல் உறுதிசெய்யப்பட்டு அடுத்த வாரம் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


[X] Close

[X] Close