'இயக்குநர் கௌதமனை கைதுசெய்ய வேண்டும்!'- அர்ஜுன் சம்பத்

இயக்குநர் கௌதமன் இந்தியா வந்ததும் கைதுசெய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர்  அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

மதுரையில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிக்கு வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''திருமாவளவன், முத்தரசன் போன்றோர் கம்யூனிஸ்ட்டுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் பேசி வருகிறார்கள். ஜெனிவாவில் வைகோ மீது நடந்த  தாக்குதல் கண்டனத்துக்குரியது. தேசத்துரோக செயல்களில் ஈடுபடுவர்கள்தான் இஸ்ரோ மீது அவதுறு பிரசாரம் செய்வார்கள். இஸ்ரோ பிரச்னையில் காவல்துறை தன் கடமையை நெல்லையில் செய்துள்ளது. அதை நாங்கள் வரவேற்கிறோம்.

அர்ஜுன்சம்பத்

ஜெனிவாவில் இயக்குநர் கௌதமன் இந்தியாவுக்கு எதிராகப் பேசியுள்ளார். அவர் இந்தியா வந்தவுடன் கைது செய்யவேண்டும். அவருடைய பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும். தேசிய நதிகள் இணைப்பை யார் எதிர்த்தாலும் அவர்களை இந்தியாவுக்குள் நடமாட விடமாட்டோம். ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக்க வேண்டும். ஐந்தாம் வகுப்புக்கு மேல் மும்முனை கல்வியை அமல்படுத்த வேண்டும். தனித்தமிழ் ஈழத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், தமிழகத்தில் சிலர் எழுப்பி வரும் தனித்தமிழ்நாடு கோரிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!