இந்தியாவிலேயே பாதுகாப்பான தலைநகரம் சென்னை..!

சென்னை

ஒவ்வொரு வருடமும் தேசிய குற்றவியல் ஆவணப் பிரிவு ஒவ்வொரு மாநிலத்திலும், நகரத்திலும் நடக்கும், பதிவு செய்யப்பட்டு இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கைகளை வெளியிடுவது வழக்கம். ஆனால், அந்த நகரங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களா என்று ஒரு தனியார் அமைப்பு சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி ஆகிய நான்கு நகரங்களிலும் வாழும் 20,597 பேரிடம் நடத்திய ஆய்வில், சென்னையில் வாழும் மக்கள் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இருபாலரும் அதிக பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

தங்கள் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் 9 மணிக்கு மேல் வீட்டிற்கு திரும்பவில்லை என்றால் பதட்டம் அடைவதாக 87% டெல்லியில் பெற்றோர்களும், பெங்களூரு மற்றும் மும்பையில் முறையே 54% மற்றும் 30% பெற்றோர்கள் பதிலளித்திருக்கிறார்கள். சென்னையில் 48% பெற்றோர்கள் பயப்படுவதாக கூறி இருக்கிறார்கள். இதே போல ஆண்கள் வெளியே இருந்தால் எந்த அளவிற்கு பயம் ஏற்படும் என்ற கேள்விக்கும் பெரிய மாறுதல் இல்லாமல் பதிலளித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், நான்கு நகர வாசிகளில், சென்னை மக்களே பெரிய அளவு பால் வேறுபாடு இல்லாமல், மிகவும் பாதுகாப்பாக உணர்வதாக அந்த ஆய்வில் தெரிவித்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!