Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாகர்கோவிலில் பெண்ணின் செயின் பறிப்பு..! திருடனை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து தர்மஅடி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பெண்ணின் கழுத்தில் இருந்து செயினை அறுத்துக் கொண்டு சென்றவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை வெறும் ஹெல்மெட் சோதனையில் தீவிரமாக இருந்து வருகிறது. தெருவுக்கு தெரு நின்று போலீஸார் வாகன சோதனை, ஹெல்மெட் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் ரோந்து பணிகளும், சட்டம் ஒழுங்கு பணிகளும் குமரி மாவட்டத்தில் செயல்படவில்லை என்று பொதுமக்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர். குமரியில் அதிகளவு வெளிமாநில கொள்ளையர்கள் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாக தகவல் பரவுகிறது. 

இந்த நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள கட்டையன்விளை பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவர், கட்டையன்விளை பகுதியில் உள்ள சாலையோர மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அந்தப் பகுதியில் புத்தேரியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து அகிலாவின் கழுத்தில் கிடந்த 11சவரன் நகையை பறித்துக் கொண்டு வேகமாக சென்றுள்ளார். இதைப்பார்த்த பொது மக்கள் ஒரு சிலர் அவரை விரட்டி பிடித்து அவரிடம் இருந்த செயினை வாங்கி அகிலாவிடம் ஒப்படைத்தனர். மேலும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட அந்த நபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இந்தச் சம்பவம் அறிந்து வந்த வடசேரி போலீஸாரிடம், பொதுமக்கள் பிடித்துவைத்திருந்த திருடன் பெருமாளை ஒப்படைத்தனர். பெருமாளை கைது செய்த போலீஸார் மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement